/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ எஸ்.வி.பாளையம் அரசு பள்ளியில் பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா எஸ்.வி.பாளையம் அரசு பள்ளியில் பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா
எஸ்.வி.பாளையம் அரசு பள்ளியில் பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா
எஸ்.வி.பாளையம் அரசு பள்ளியில் பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா
எஸ்.வி.பாளையம் அரசு பள்ளியில் பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா
ADDED : ஜூலை 09, 2024 11:31 PM

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் உணவு திருவிழா நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா குறித்த விழிப்புணர்வு கண்காட்சி தமிழ்கூடல் இலக்கியமன்றத்தின் சார்பில் நடந்தது.
பள்ளி வளாகத்தில் பாரம்பரிய உணவு கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் காட்சிபடுத்தப்பட்டது. நிகழ்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். முதுகலை தமிழாசிரியர் இளையராஜா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஊராட்சி தலைவர் தனகோட்டி கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பாரம்பரிய இயற்கை உணவு முறை குறித்து மாணவர்களிடையே பேசினார். கண்காட்சியில் ஊர் முக்கிய பிரமுகர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் டயானா,தனசேகரன்,சின்னதுரை,பிரகாஷ்,சத்தியவதி,கோமதுரை,அசோகன் ஆகியோர் பார்வையிட்டு இயற்கை உணவு குறித்த விளக்கங்களை மாணவர்களிடம் கேட்டு பாரம்பரிய உணவை சுவைத்து மாணவ,மாணவிகளை பாராட்டினர்.