/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ டிப்பர் லாரி உரிமையாளர்கள் பகண்டைகூட்ரோட்டில் மறியல் டிப்பர் லாரி உரிமையாளர்கள் பகண்டைகூட்ரோட்டில் மறியல்
டிப்பர் லாரி உரிமையாளர்கள் பகண்டைகூட்ரோட்டில் மறியல்
டிப்பர் லாரி உரிமையாளர்கள் பகண்டைகூட்ரோட்டில் மறியல்
டிப்பர் லாரி உரிமையாளர்கள் பகண்டைகூட்ரோட்டில் மறியல்
ADDED : ஜூலை 14, 2024 06:31 AM

ரிஷிவந்தியம் : பகண்டைகூட்ரோட்டில் போலீசாரை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் விநாயகமூர்த்தி. இவர், தனது விளை நிலத்தை சமன்படுத்த வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலம் அனுமதி பெற்று, அதே கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து வண்டல் மண்ணை டிப்பர் லாரியில் ஏற்றிச் சென்றார்.
மாலை 5:05 மணிக்கு பகண்டைகூட்ரோடு அருகே சென்றபோது, அங்கு வாகன சோதனை மேற்கொண்ட திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலாஜி டிப்பர் லாரியை மறித்து விசாரித்தார். அப்போது, டிராக்டர் டிப்பரில்தான் வண்டல் மண் ஏற்றிச் செல்ல அனுமதி எனவும், மாலை 5:00 மணிக்கு மேல் வண்டல் மண் எடுத்துச் செல்லக் கூடாது எனக் கூறி டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனைக் கண்டித்து வாணாபுரம் டிப்பர் லாரி உரிமையாளர்கள், பகண்டைகூட்ரோடு மும்முனை சந்திப்பில் இரவு 8:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரியின் அனுமதி சீட்டின் உண்மை தன்மை ஆராய்ந்து, சம்மந்தப்பட்ட அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனையேற்று இரவு 9:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.