/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
ADDED : ஜூன் 24, 2024 05:48 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த நெடுங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 52; ஆசிரியர்.
இவர் நேற்று காலை வயலுக்கு சென்ற நிலையில், அவரது மனைவி பெட்டிசியா வீட்டை பூட்டிக் கொண்டு கோவிலுக்குச் சென்றார்.
9:30 மணியளவில் இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஐந்தரை சவரன் நகை மற்றும் 8,500 ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.