/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாதாம்; இந்திய கம்யூ., முத்தரசன் சப்பை கட்டு சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாதாம்; இந்திய கம்யூ., முத்தரசன் சப்பை கட்டு
சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாதாம்; இந்திய கம்யூ., முத்தரசன் சப்பை கட்டு
சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாதாம்; இந்திய கம்யூ., முத்தரசன் சப்பை கட்டு
சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாதாம்; இந்திய கம்யூ., முத்தரசன் சப்பை கட்டு
ADDED : ஜூன் 22, 2024 05:05 AM
கள்ளக்குறிச்சி : 'கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாது' என இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய இந்திய கம்யூ., செயலாளர் முத்தரசன் கூறியதாவது:
கள்ளச்சாராய வியாபாரிகளுடன் உள்ளூர் போலீசார், வருவாய்த் துறையினர், மதுவிலக்கு போலீசார் கூட்டணி வைத்ததுதான் இந்த சோக சம்பவத்திற்கு காரணம். கலெக்டரின் மோசமான அறிக்கையில் உயிரிழுப்புகள் அதிகரித்துள்ளது. அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்பது முதல்வருக்கு, டி.ஜி.பி.,க்கு தெரியாது. ஆனால் உள்ளூர் போலீசார், உளவுத்துறை போலீசாருக்கு தெரியும். வியாபாரிகள் போலீசாருக்கு மாமூல் கொடுப்பதால் காட்டிக் கொடுப்பதில்லை.
ஆனால் சாராயம் விற்பவர் குறித்து தகவல் கொடுப்பவர்களை போலீசார் கைது செய்கின்றனர். இதனால் தான் இதுபோன்ற விபரீதங்கள் நடந்துள்ளது. அவை தடுக்கப்பட வேண்டும் என்றார்.