Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆலமரம் வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடப்பட்டது

ஆலமரம் வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடப்பட்டது

ஆலமரம் வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடப்பட்டது

ஆலமரம் வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடப்பட்டது

ADDED : ஜூலை 30, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பழமையான ஆலமரம் வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடப்பட்டது.

கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை 4 வழிச் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக கள்ளக்குறிச்சியிலிருந்து சங்கராபுரம் வரை சாலையோரம் இருந்த 900 மரங்கள் நெடுஞ்சாலைத்துறை முலம் அகற்றப்பட்டுள்ளன.

மைலம்பாறையில் 30 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று வெட்டப்படும் நிலை ஏற்பட்டது. இந்த மரம் பல பறவைகளின் வாழ்விடமாக இருந்ததால் மரத்தை வெட்டக்கூடாது என சென்னை, ஐகோர்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீதான விசாரணையில், அந்த ஆல மரத்தை வேருடன் அகற்றி வேறு இடத்தில் நட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையொட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜன் தலைமையில், உதவி கோட்டப் பொறியாளர் சிவசுப்ரமணியன், உதவி பொறியாளர் மணிவண்ணன், தாசில்தார் சசிகலா, இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஆகியோர் முன்னிலையில் ஜே.சி.பி., இயந்திரம், கிரேன் உதவியுடன் வேருடன் அகற்றி 200 மீட்டர் தள்ளி மாற்று இடத்தில் ஆலமரம் நடப்பட்டு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us