/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வீட்டின் பின்புற கதவை உடைத்து 10 சவரன் நகைகள் துணிகர கொள்ளை வீட்டின் பின்புற கதவை உடைத்து 10 சவரன் நகைகள் துணிகர கொள்ளை
வீட்டின் பின்புற கதவை உடைத்து 10 சவரன் நகைகள் துணிகர கொள்ளை
வீட்டின் பின்புற கதவை உடைத்து 10 சவரன் நகைகள் துணிகர கொள்ளை
வீட்டின் பின்புற கதவை உடைத்து 10 சவரன் நகைகள் துணிகர கொள்ளை
ADDED : ஜூன் 18, 2024 05:27 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே பூட்டிய வீட்டின் பின்புற கதவை உடைத்து 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த திருமால் மனைவி மீரா, 20; திருமால் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மீரா மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகளுடன் தனியாக புத்திராம்பட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மீராவின் அம்மா வீடான பாலப்பட்டு கிராமத்தில் நடந்த விசேஷத்திற்காக சென்றுள்ளார்.விசேஷத்தை முடித்துவிட்டு மீண்டும் நேற்று மாலை வீட்டிற்கு மீரா வந்த போது, வீட்டில் பின்புற கதவு திறந்த நிலையில் பீரோவில் உள்ள துணிகள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி., மனோஜ் குமார், இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
நகைகளை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.