/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கோவிலில் தாலி திருட்டு: பெண்ணுக்கு வலை கோவிலில் தாலி திருட்டு: பெண்ணுக்கு வலை
கோவிலில் தாலி திருட்டு: பெண்ணுக்கு வலை
கோவிலில் தாலி திருட்டு: பெண்ணுக்கு வலை
கோவிலில் தாலி திருட்டு: பெண்ணுக்கு வலை
ADDED : ஜூன் 05, 2024 11:10 PM

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் உற்சவரிடம் இருந்த தாலியை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
மணலுார்பேட்டையில் பழமை வாய்ந்த பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இதன் அர்ச்சகர் ஜெகதீசன், 45. கடந்த 3ம் தேதி இரவு வழக்கம் போல் பூஜை முடிந்து, கதவை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
மறுநாள் 4ம் தேதி காலை கதவைத் திறந்து, கருவறை உள்ளே ஸ்ரீதேவி பூதேவி தாயார் கழுத்தில் இருந்த இரண்டு கிராம் எடையுள்ள இரண்டு தாலிகள் காணாமல் போனது தெரிய வந்தது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வேல்விழி, மணலுார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கோவில் வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், கடந்த 1ம் தேதி காலை 6:00 மணி அளவில் ஒரு பெண் கருவறைக்குள் சென்று தாலியை பறித்துக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தாலி திருடிச் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.