/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 24, 2024 05:59 AM
கள்ளக்குறிச்சி : கீரனுார் புறவழிச்சாலையில் நின்றிருந்த வாகனத்தின் மீது பைக் மோதியதில் வாலிபர் இறந்தார்.
தியாகதுருகத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் வினோத்குமார், 37; இருவரும் கடந்த 20ம் தேதி கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகத்திற்கு பைக்கில் சென்றனர். பைக்கை வினோத் ஓட்டினார்.
கீரனுார் மேம்பாலம் அருகே சென்ற போது, சாலையில் நின்றிருந்த ஒரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கும் படுகாயம் அடைந்தனர்.
உடன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வினோத்குமார் நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.