/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ களைக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை களைக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
களைக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
களைக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
களைக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
ADDED : ஜூன் 25, 2024 05:28 AM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே வயிற்று வலியால் களைக்கொல்லி மருந்தை குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சின்னசேலம் அடுத்த ராயர்பாளையம், பள்ளக்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு மகன் குமரேசன், 25; இவர், கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 23ம் தேதி காலை 4:30 மணியளவில் குமரேசனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த அவர், வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.
உடன், சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குமரேசன் நேற்று காலை இறந்தார்.
புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.