/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சியில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி முகாம் கள்ளக்குறிச்சியில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி முகாம்
கள்ளக்குறிச்சியில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி முகாம்
கள்ளக்குறிச்சியில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி முகாம்
கள்ளக்குறிச்சியில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 04, 2024 10:05 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த முகாமிற்கு, கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் யோகவிஷ்ணு தலைமை தாங்கினார்.
கரும்பு பெருக்கு அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, பூச்சியியல் வல்லுநர் துரைசாமி பங்கேற்று, கரும்பினை தாக்கும் இடைக்கணுப்புழு, குருத்து மாவுப்பூச்சி உள்ளிட்ட இதர பூச்சிகள் குறித்தும், அதன் தடுப்பு முறைகள் குறித்தும் விளக்கமளித்து பேசினார்.
மேலும், நோயியியல் வல்லுநர் ரவிச்சந்திரன் கரும்பு பயிரில் ஏற்படும் 'பொக்கா போயிங்' நோய் மற்றும் பிற நோய்கள் குறித்தும், அதன் தடுப்பு முறைகள் குறித்தும் பேசினார்.
தொடர்ந்து, கரும்பு ஆராய்ச்சியாளர்கள் கூடுதல் மகசூல் பெற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தும் பேசி கலந்துரையாடினர்.
கள்ளக்குறிச்சி வடக்கு கோட்ட கரும்பு அலுவலர் ஆன்றன்சேவியர் அருள் நன்றி கூறினார்.