ADDED : ஜூலை 13, 2024 06:18 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் விக்ரம்,20; இவர் கடந்த 6ம் தேதி தாத்தா வீட்டிற்கு செல்வதாக பெற்றோர்களிடம் தெரிவித்துவிட்டு பைக்கில் சென்றுள்ளார்.
தொடர்ந்து, நீண்ட நேரமாகியும் விக்ரம் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது தந்தை வேலு, மாமனாரை போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, விக்ரம் புறப்பட்டு நீண்ட நேரமாகி விட்டது என தெரிவித்துள்ளார்.
பல்வேறு இடங்களில் தேடியும் விக்ரம் கிடைக்காததால் அவரது தந்தை வேலு கொடுத்துள்ள புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.