/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ டாம்கோ, டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்க கூர்ந்தாய்வு குழு கூட்டம் டாம்கோ, டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்க கூர்ந்தாய்வு குழு கூட்டம்
டாம்கோ, டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்க கூர்ந்தாய்வு குழு கூட்டம்
டாம்கோ, டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்க கூர்ந்தாய்வு குழு கூட்டம்
டாம்கோ, டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்க கூர்ந்தாய்வு குழு கூட்டம்
ADDED : மார் 12, 2025 09:55 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில்டாம்கோ, டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்குவது தொடர்பான கூர்ந்தாய்வு குழு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். டாம்கோ, டாப்செட்கோ திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின தனிநபர்களுக்கும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொழில் தொடங்கவும் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புபவர்கள், தாங்கள் மேற்கொள்ள விரும்பும் தொழில் தொடர்பான கோப்புகளை தயார் செய்து சமர்ப்பித்திருந்தனர்.
இந்நிலையில், கடன் வழங்குவது தொடர்பான கூர்ந்தாய்வு குழு கூட்டம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி துணைப்பதிவாளர் சுகந்தலதா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, கூட்டுறவு சங்க கண்காணிப்பாளர்கள் சசிகலா, சாந்தி ஆகியோர் கடன் தொடர்பான கோப்புகள் மீது ஆய்வு மேற்கொண்டு, தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்தனர். இதில் தேர்வு செய்யப்படும் கோப்புகள் சென்னையில் உள்ள டாம்கோ, டாப்செட்கோ அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.