ADDED : ஆக 04, 2024 04:36 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த விரியூர் இம்மாகுலேட் மகளிர் கல்லுாரி சார்பில் பூட்டை அழகப்பா நடுநிலை பள்ளியில் மரகன்று நடும் விழா நடந்தது.
பினியன்மேரி குருசம்மாள் தலைமை தாங்கினார். கல்லுரி முதல்வர் லில்லிமேரி முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கண்ணன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சந்திரசேகர் வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளி வளாகத்தில் விரியூர் இம்மாகுலேட் மகளிர் கல்லுரி மாணவிகள் 50 மரகன்றுககளை நட்டனர். என்.எஸ்.எஸ்., மாணவி ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.