ADDED : ஜூன் 19, 2024 01:04 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே காணாமல் போனவர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
திருக்கோவிலுார் அடுத்த டி.அத்திப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் தைரியம், 38; திருமணமாகாதவர். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிராந்தி பாட்டில்களை பொறுக்கி விற்று வந்தார். கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
நேற்று முன்தினம் டி.அத்திப்பாக்கம், கிழக்கு பிரிவு, வனப்பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரது உறவினர்கள் சென்று பார்த்த போது, இறந்தது தைரியம் என தெரிய வந்தது.
காட்டுப்பகுதிக்குச் சென்றவர் வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.