ADDED : ஜூன் 28, 2024 11:13 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகரம் 10-வது வார்டு, சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதன் இருக்கைகளின் அடிப்பகுதி உடைந்துள்ளது.
அதிலே தினமும் பயணிகள் அமர்ந்து பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.
இரவு நேரங்களில் அபாயம் தெரியாமல் இதில் அமரும் பயணிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதை தடுக்கவும், மழை, வெயிலின் தாக்கத்தால் நிழற்குடையில் காத்திருக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.