ADDED : ஆக 02, 2024 11:35 PM

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டில் ஏரிக்கு செல்லும் கால்வாயை தனி நபர் ஆக்கிரமித்து கடை கட்டியிருந்தார்.
அவற்றை நேற்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன் தலைமையில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது. வருவாய் ஆய்வாளர் நிறைமதி, கிராம நிர்வாக அலுவலர் முருகன் உடன் இருந்தனர்.
மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.