/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் வழங்கல் பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் வழங்கல்
பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் வழங்கல்
பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் வழங்கல்
பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் வழங்கல்
ADDED : ஜூலை 04, 2024 10:07 PM

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் வழங்கப்படுகிறது.
வாணாபுரத்தில் உள்ள ரிஷிவந்தியம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் சியாம்சுந்தர் கூறியதாவது:
விளை நிலங்களில் ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்யும் போது, மண்ணில் இருக்கும் வேரூட்ட சத்துகளை பயிர் எடுத்துக் கொள்ளும். செயற்கை உரங்களால் குன்றிப்போன மண் வளத்தை பாதுகாக்க பசுந்தாள் உர பயிர்களை பயிரிட வேண்டும்.
இதை எப்படி பயிரிடுவது என்பது குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும். வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்வது மட்டுமின்றி, ஆண்டுக்கு ஒரு முறை பசுந்தாள் உரப்பயிர்களை உற்பத்தி செய்தால் மண் வளத்தை மேம்படுவதுடன், விளைச்சல் அதிகரிக்கும். ஒரு விவசாயிக்கு 20 கிலோ விதைகள் மானிய விலையில் 1,300 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இத்துடன் 5 தென்னங்கன்றுகள் அல்லது 2 லிட்டர் திரவ உயிர் உரங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி அலுவலர் புஷ்பவள்ளி, துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண் அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சேகர், நசுருல்லாகான், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி, உதவி மேலாளர் சுகனேஷ்வரன் உட்பட பலர் உடனிருந்தனர்.