ADDED : ஜூலை 22, 2024 11:46 PM

கள்ளக்குறிச்சி :
சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்சார கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மண்டல தலைவர் காசி மன்னன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாரியப்பன், உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னான், தொகுதி செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
மாநில மகளிர் பாசறை செயலாளர் ரஜியம்மா பாபு, இளைஞர் பாசறை செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும். தமிழகத்தில் கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்ன.
விழுப்புரம்
பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மண்டல செயலாளர் விக்ரம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம், மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட பொருளாளர் கரிகாலன், தென்மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா, கிழக்கு செயலாளர் பேச்சிமுத்து, தென்நாட்டு செயலாளர் முருகையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். செயலாளர்கள் தேசிங்கு, சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.