Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தியாகதுருகம் ஒன்றியத்தில் திட்ட பணி: கலெக்டர் ஆய்வு

தியாகதுருகம் ஒன்றியத்தில் திட்ட பணி: கலெக்டர் ஆய்வு

தியாகதுருகம் ஒன்றியத்தில் திட்ட பணி: கலெக்டர் ஆய்வு

தியாகதுருகம் ஒன்றியத்தில் திட்ட பணி: கலெக்டர் ஆய்வு

ADDED : ஆக 01, 2024 07:44 AM


Google News
Latest Tamil News
தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தியாகதுருகம் ஒன்றியம், பல்லகச்சேரி ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏரி துார் வாரும் பணி, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கைப்பந்து மற்றும் கபடி விளையாட்டு மைதானம், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பீளமேடு ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்குப்பத்தில் அரசு பள்ளியில் அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 32.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் துவக்கப்பள்ளி கூடுதல் கட்டடத்திற்கான கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

பின், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணி, பிரிதிமங்கலம் ஊராட்சியில் 9.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுய உதவி குழுவினருக்கான சுய தொழில் கட்டட கட்டுமானப் பணி, 11.58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனிநபர் கிணறு அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.

அதனையடுத்து, சித்தலுார் ஊராட்சியில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே 7.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் உயர் மட்ட பாலம் பணியையும், தியாகை ஊராட்சியில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டார்.

ஆய்வின்போது பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகந்நாதன், துணை பி.டி.ஓ., க்கள் தினகர் பாபு, தயாபரன், ஒன்றிய பொறியாளர்கள் திருமணிகண்டன், பழனிவேல், ஊராட்சி தலைவர்கள் சின்னதுரை, ராமலிங்கம், மதியழகன், கணபதி, அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us