Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்; வாணாபுரத்தில் கலெக்டர் கள ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்; வாணாபுரத்தில் கலெக்டர் கள ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்; வாணாபுரத்தில் கலெக்டர் கள ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்; வாணாபுரத்தில் கலெக்டர் கள ஆய்வு

ADDED : ஜூன் 18, 2024 11:59 PM


Google News
கள்ளக்குறிச்சி : வாணாபுரம் தாலுகாவில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் அரசின் நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து கலெக்டர் இன்று கள ஆய்வு செய்கிறார்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் படி, மாதந்தோறும் கடைசி புதன்கிழமை (ஒரு நாள் மட்டும்), தாலுகா அளவில் தங்கி, கள ஆய்வு மேற்கொள்ள கலெக்டர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் வாணாபுரம் தாலுகாவில் இன்று (19.06.2024) புதன்கிழமை கள ஆய்வு செய்கிறார்.

இதில், அரசு அலுவலகங்களின் வசதி, செயல்பாடு, திட்டங்களை செயல்படுத்துதல், மக்களின் தேவை, கோரிக்கைகள், காலை உணவு திட்டம், அரசு மருத்துவமனை, இ--சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடைகள், பி.டி.ஓ., தாலுகா, வருவாய் ஆய்வாளர் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்டம், போக்குவரத்து சேவை, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அரசு விடுதிகள், திடக்கழிவு மற்றும் சுகாதார மேலாண்மைகள் உட்பட பல்வேறு அரசின் திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கலெக்டர் ஆய்வு செய்யும் இடங்களை தவிர்த்து, மற்ற பகுதிகளில் அனைத்து துறை மாவட்ட அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, அதன் மதிப்பாய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இத்திட்டத்தின் ஆய்வு விபரம், மக்களின் சேவைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us