/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சியில் 26ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சியில் 26ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சியில் 26ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சியில் 26ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சியில் 26ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜூலை 21, 2024 07:55 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 26ம் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாதம் தோறும் 3வது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. அதன்படி, வரும் 26ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள முகாமில், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் நிறுவனம் பங்கேற்று, ஜியோ பாய்ண்ட் மேனேஜர், அசிஸ்டன்ட் மேனேஜர், பைபர் அசோஷியேட், பைபர் இன்ஜினியர், டிஜிட்டல் ரிப்பேர் ஸ்பெலிஸ்ட், ஏர் பைபர் பிரிலேன்சர் டெக்னிசியன், ஜியோ பாய்ண்ட் லீட் மற்றும் விற்பனை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்ய உள்ளது.
எனவே, மாவட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்து முடித்த, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட நபர்கள் முகாமில் பங்கேற்கலாம்.
கல்வித்தகுதி மற்றும் தேர்வு செய்யப்படும் பணி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். பகுதி நேர அடிப்படையிலும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.