ADDED : ஜூலை 22, 2024 01:13 AM
கள்ளக்குறிச்சி : இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு யோகா விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
கல்லுாரியில் கவுதம புத்தர் யோகா மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார்.
தமிழ்த்துறை தலைவர் பிரவீனா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அறிவு திருக்கோவில் மனவளக்கலை மன்ற நிர்வாக அறங்காவலர் தங்கவேல், செயலாளர் சிவசூரியன், சங்கராபுரம் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் லக் ஷனா யோகா பயிற்சி அளித்தார்.
மனவளக்கலை மன்ற பொருளாளர்கள் புகழேந்தி, ராஜேந்திரன், துணைத் தலைவர்கள் சீனிவாசன், குணசேகரன், சாந்தி, ரதி, திட்ட அலுவலர் வெங்கடசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினர். கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
துறை தலைவர் அசோக் நன்றி கூறினார்.