Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை

ADDED : ஜூலை 20, 2024 05:51 AM


Google News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பெருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து மனைவி கவுசல்யா, 39; இவர்களுக்கு ஜோயல் என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கவுசல்யா, தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 16ம் தேதி மதியம் 12:00 மணியளவில் கவுசல்யா, குழந்தையுடன் டைலர் கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us