Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

ADDED : ஜூன் 08, 2024 04:43 AM


Google News
கள்ளக்குறிச்சி, : பெத்தானுாரில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சின்னசேலம் அடுத்த பெத்தானுார் காலனி பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து தெருக்களுக்கு செல்லும் பைப் லைன் உடைந்து துண்டானது. இதனால், ஒரு தெருவுக்கு மட்டும் கடந்த 2 தினங்களாக தண்ணீர் வரவில்லை.

நேற்றும் தண்ணீர் வரததால் பைப்லைன் சரிசெய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன், பெத்தானுார் - ஈசாந்தை சாலையில் நேற்று காலை 7:30 மணியள வில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சின்னசேலம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை யடுத்து, காலை 7:50 மணியளவில் மறியலில் ஈடுபட் டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 20 நிமிடங்களாக அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us