/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாதனையாளர்களுக்கு பத்ம விருது விண்ணப்பங்கள் வரவேற்பு சாதனையாளர்களுக்கு பத்ம விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
சாதனையாளர்களுக்கு பத்ம விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
சாதனையாளர்களுக்கு பத்ம விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
சாதனையாளர்களுக்கு பத்ம விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 04, 2024 05:01 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாதனை புரிந்தவர்களிடமிருந்து மத்திய தேசிய விருதுகளான பத்மவிபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் மத்திய அரசால் பத்மவிபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. விருதுகள் வரும் 2025 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
இவ்விருதுக்கு கலை, சமூகப்பணி, பொதுசேவை, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, அரசு குடிமைப்பணி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் தகுதியுடைவர் ஆவர்.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விளையாட்டுதுறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்கள் பெற https://awards.gov.in என்ற இணையதள முகவரி மூலம் மட்டுமே வரும் ஜூன் 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணபித்த விபரத்தின் நகலினை ஜூன் 30க்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு வழங்க வேண்டும்.
மேலும், கூடுதல் விபரங்கள் பெற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களின் 74017 03474 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம்.