ADDED : ஜூன் 17, 2024 01:18 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்றவர் அரசு பஸ் மோதி உயிரிழந்தார்.
சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு பஸ் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. பஸ்சை சேலம் புளியங்குறிச்சியை சேர்ந்த டிரைவர் கலைச்செல்வன், 32; ஓட்டிச்சென்றார். இரவு 8:30 மணியளவில் முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தம், ஒரத்துார் கூட்ரோடு அருகே வந்தபோது சாலையை கடந்த நபர் மீது பஸ் மோதியது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சென்டர் மீடியனில் மோதி நின்றது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் இறந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.
விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.