ADDED : ஜூலை 20, 2024 05:50 AM
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் காரை திருடிச் சென்ற சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம், 54; இவர் கடந்த 17ம் தேதி, தனக்கு சொந்தமான காரை சர்வீஸ் மற்றும் டயர் மாற்றுவதற்கு சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள தனியார் ஒர்க் ஷாப்பில் நிறுத்திவிட்டு, முன் பணம் 3,500 ரூபாயை கடை உரிமையாளர் முத்துவேலுவிடம் கொடுத்து விட்டு சென்றார்.
மறுநாள் வந்து பார்த்தபோது காரை காணவில்லை. இதுகுறித்து கடை உரிமையாளர் முத்துவேலுவிடம் கேட்டதற்கு கடையில் வேலை செய்த க.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் காரை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சதாசிவம் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்கு பதிந்து காரை திருடிச் சென்ற சிறுவனை தேடி வருகிறார்.