Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தேசிய டேக்வாண்டோ போட்டி கள்ளக்குறிச்சி மாணவி தேர்வு

தேசிய டேக்வாண்டோ போட்டி கள்ளக்குறிச்சி மாணவி தேர்வு

தேசிய டேக்வாண்டோ போட்டி கள்ளக்குறிச்சி மாணவி தேர்வு

தேசிய டேக்வாண்டோ போட்டி கள்ளக்குறிச்சி மாணவி தேர்வு

ADDED : ஆக 02, 2024 02:21 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: விசாகப்பட்டிணத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்க கள்ளக்குறிச்சி மாணவி விசாகப்பட்டிணம் சென்றார்.

கள்ளக்குறிச்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் மகள் நட்சத்திரா, 14; கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் இவர், டேக்வாண்டோ பயிற்சி பெற்று வந்தார்.

சில நாட்களுக்கு முன் திருச்சியில் நடந்த மாநில அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் விசாகப்பட்டிணத்தில் 4 நாட்கள் நடக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வானார்.

தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி வெற்றி பெற்ற மாணவியை பாராட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. அத்துடன் விசாகப்பட்டிணத்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்பதற்கான பயண செலவினை கள்ளக்குறிச்சி கமலா குரூப்ஸ், சரோஜா சண்முகம் அறக்கட்டளை சார்பில் சுதா வைத்திலிங்கம் வழங்கி பாராட்டினார்.போட்டியில் பங்கேற்க சென்ற மாணவி நட்சத்திரா மாவட்ட பயிற்சியாளர் ராஜசேகரன் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியை கீதா வாழ்த்தி வழியனுப்பினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us