/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நாதஸ்வர இசை பயிற்சி மாணவர் தற்கொலை நாதஸ்வர இசை பயிற்சி மாணவர் தற்கொலை
நாதஸ்வர இசை பயிற்சி மாணவர் தற்கொலை
நாதஸ்வர இசை பயிற்சி மாணவர் தற்கொலை
நாதஸ்வர இசை பயிற்சி மாணவர் தற்கொலை
ADDED : ஜூன் 04, 2024 06:25 AM
உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை அருகே விடுமுறைக்கு வந்த நாதஸ்வர இசை பயிற்சி மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்துார்பேட்டை அடுத்த தென்எல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் தமிழ்ச்செல்வன், 17; திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நாதஸ்வர இசை பள்ளியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
இவர் மே மாத விடுமுறையில் கடந்த ஒரு மாதமாக உளுந்துார்பேட்டையில் உள்ள அவரது அண்ணன் மணிகண்டன் வீட்டில் தங்கியிருந்தார். அவர் வீட்டில் இருந்தபோது நாதஸ்வர பயிற்சி மேற்கொள்ளவில்லை என அண்ணன் கேட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த தமிழ்ச்செல்வன், வீட்டில் சீலிங் பேனில் துாக்கு போட்டுக் கொண்டார். உடன், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.
உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.