/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி தொகுதியில் 3ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி தொகுதியில் 3ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி
கள்ளக்குறிச்சி தொகுதியில் 3ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி
கள்ளக்குறிச்சி தொகுதியில் 3ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி
கள்ளக்குறிச்சி தொகுதியில் 3ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி
ADDED : ஜூன் 05, 2024 11:11 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சி 73,652 ஓட்டுக்களை பெற்று மூன்றாமிடத்தை பிடித்தது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வில் மலையரசன், அ.தி.மு.க., வில் குமரகுரு, பா.ம.க., வில் தேவதாஸ், நாம் தமிழர் கட்சியில் ஜெகதீசன் உட்பட 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில், 12 லட்சத்து 42 ஆயிரத்து 597 பேர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தனர். 8,456 தபால் ஓட்டுக்கள் பெறப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. அதில், தி.மு.க., வேட்பாளர் மலையரசன் 5,61,589 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு 5,07,805 ஓட்டுக்களை பெற்று இரண்டாமிடத்தை பிடித்தார்.
அடுத்த படியாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசன் ரிஷிவந்தியம் 12,833, சங்கராபுரம் 9,951, கள்ளக்குறிச்சி 12,129, கங்கைவல்லி 10,612, ஆத்துார் 11,897, ஏற்காடு 15,676, தபால் ஓட்டு 554 என மொத்தமாக 73,652 ஓட்டுக்களை பெற்று மூன்றாமிடத்தை பிடித்தார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி 30,246 ஓட்டுக்கள் பெற்ற நிலையில், தற்போது இரட்டிப்பாகி உள்ளது.
அதேபோல், பா.ம.க., வேட்பாளர் தேவதாஸ், ரிஷிவந்தியம் 8,169, சங்கராபுரம் 11,082, கள்ளக்குறிச்சி 10,960, கங்கைவல்லி 11,108, ஆத்துார் 13,755, ஏற்காடு 15,559, தபால் ஓட்டு 657 என, மொத்தமாக 71,290 ஓட்டுக்களை பெற்று, 4வது இடத்தை பிடித்துள்ளார்.