Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முத்து மாரியம்மன் திருத்தேர் திருவிழா

முத்து மாரியம்மன் திருத்தேர் திருவிழா

முத்து மாரியம்மன் திருத்தேர் திருவிழா

முத்து மாரியம்மன் திருத்தேர் திருவிழா

ADDED : ஜூன் 26, 2024 11:27 PM


Google News
சின்னசேலம்: கனியாமூர் கிராம முத்து மாரியம்மன் திருத்தேர் திருவிழா நேற்று நடந்தது.

சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராம முத்து மாரியம்மன் திருத்தேர் திருவிழாவை கடந்த 19-ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமி திருவீதியுலா , கரகாட்டம், அன்னதானம் பொங்கலிடுதல் ஆகியவைகள் நடைபெற்றது.

நேற்று காலை 6 மணிக்கு காத்தவராயன் மோடி எடுத்தலும், கோட்டை இடித்தல், அலகு குத்துதலுக்குப்பின், வீதி உலா உற்சவம் நடத்தப்பட்டது. மாலை 6 மணி அளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு, சன்னதியை விட்டு கிளம்பி தேரோடும் வீதிகளில் வீதியுலா வந்தது. தொடர்ந்து இன்று பகல் 3 மணிக்கு மேல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் சாகை ஊற்றுதல் திருவிழாவும் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us