ADDED : ஜூன் 30, 2024 04:54 AM
கள்ளக்குறிச்சி, : நமச்சிவாயபுரத்தில் தாயைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி அலமேலு, 53; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 26ம் தேதி காலை 11.30 மணியளவில் சின்னசேலத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவரைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகன் பழனிவேல் அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.