சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை காராணமாக கொசு தொல்லை அதிகமாக உள்ளது.
கொசுவை கட்டுப்படுத் தும் வகையில் சங்கராபுரம் பேருராட்சி செயல் அலுவலர் (பொ) ராஜலட்சுமி உத்திரவின்பேரில் சங்கராபுரம் நகரில் உள்ள 15 வார்டுகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடந்தது.