/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்., கட்சியில் இணைந்தனர் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்., கட்சியில் இணைந்தனர்
50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்., கட்சியில் இணைந்தனர்
50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்., கட்சியில் இணைந்தனர்
50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்., கட்சியில் இணைந்தனர்
ADDED : ஜூலை 06, 2024 05:42 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
சங்கராபுரம் ஒன்றியம், மல்லாபுரம், அரசம்பட்டு, பூட்டை கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., துணைத் தலைவர் இதயதுல்லா முன்னிலையில் காங்., கட்சியில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் நகர தலைவர் முகமது பாஷா, மாநில மாணவர் காங்., செயலாளர் ஆதில்கான், கயூம்பாஷா, முகமது உட்பட பலர் பங்கேற்றனர்.
நகர வர்தகர் பிரிவு செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.