/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மருந்து இல்லை என்பது தவறு அமைச்சர் சுப்ரமணியன் பேட்டி மருந்து இல்லை என்பது தவறு அமைச்சர் சுப்ரமணியன் பேட்டி
மருந்து இல்லை என்பது தவறு அமைச்சர் சுப்ரமணியன் பேட்டி
மருந்து இல்லை என்பது தவறு அமைச்சர் சுப்ரமணியன் பேட்டி
மருந்து இல்லை என்பது தவறு அமைச்சர் சுப்ரமணியன் பேட்டி
ADDED : ஜூன் 22, 2024 04:24 AM

கள்ளக்குறிச்சி : 'கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்து இல்லை என்ற தவறான தகவலை எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்து இருப்பது சரியல்ல' என அமைச்சர் சுப்ரமணியன் கூறினார்.
கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேற்று இரவு பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கூறியதாவது:
மெத்தனால் சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 135 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையை அமைச்சர் உதயநிதி வழங்கியுள்ளார்.
கடந்த 4 நாட்களுக்கு முன் சாராயம் குடித்தவர்களுக்கு காலதாமதமாக பாதிப்பு ஏற்படுவதால், மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, 'ஓம்பிரிசோல்' என்ற மருந்து கையிருப்பு இல்லை என கூறியுள்ளார். ஆனால், ஒவ்வொரு படுக்கையிலும் 8 முதல் 10 மருந்துகள் இருப்பு உள்ளது. தமிழகத்தில், 4 கோடியே 42 லட்சம் மருந்து கையிருப்பில் உள்ளது.
தற்போது அனைவரும் ஒன்று கூறடி பாதித்தவர்களை தேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசுக்கு ஆலோசனை தரலாம். அதைவிட்டு, பதற்றத்தை ஏற்படுத்துவது தவறு.
மெத்தனாலை உட்கொண்ட 30 மணி நேரத்தில் உடலின் ஒவ்வொரு பாகங்களாக செயலிழக்கும். ஜிப்மர் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனைகளில் சிகிச்சையில் இருப்பவர்களில் 8 பேருக்கு கண் பார்வை பாதிக்கும் சூழல் உள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உடனடியாக மூக்கு வழி பிராணவாயு செலுத்தப்படுகிறது. தொடர்ந்து, நரம்பு வழி திரவங்கள் செலுத்துதல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 1 எம்.எல்., அளவு எத்தனால் ஊசி, 6 மணி நேரத்திற்கு ஒரு முறை லியோகோவிரின் 10 எம்.ஜி., நரம்பு வழியாகவும், ரத்த சீரத்தில் உள்ள பை கார்போனேட் அளவை சரி செய்ய சோடா பைகார்போனெட் ஊசி, ஹீமோ டயாலிசிஸ், பிரைண்டோ பிரிசோல் ஊசி செலுத்தப்படுகிறது.
கடைசியாக செயற்கை சுவாசம் அளிக்க வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
இவ்வாறு அமைச்சர் சுப்ரமணியன் கூறினார்.