ADDED : ஜூன் 02, 2024 05:29 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்ற யூனியன் ஆபீஸ் ரோட்டைச் சேர்ந்த யாசின், 23; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.