Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மரம் வெட்டிய தகராறு: 6 பேர் மீது வழக்கு

மரம் வெட்டிய தகராறு: 6 பேர் மீது வழக்கு

மரம் வெட்டிய தகராறு: 6 பேர் மீது வழக்கு

மரம் வெட்டிய தகராறு: 6 பேர் மீது வழக்கு

ADDED : ஜூலை 30, 2024 06:27 AM


Google News
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை அருகே மரம் வெட்டிய தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மணலுார்பேட்டை அடுத்த தேவரடியார்குப்பத்தைச் சேர்ந்தவர் பச்சை, 55; இவரது நிலத்திலிருந்து நுணா மரத்தை பக்கத்து நிலத்தைச் சேர்ந்த வெள்ளையன் மகன் ஏழுமலை, 29; வெட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த பச்சை அவரது மனைவி பார்வதி, மகன் சக்திவேல் ஆகியோர் ஏழுமலை வீட்டிற்கு சென்று தகராறு செய்து, ஏழுமலை அவரது மனைவி கலைச்செல்வி, 22; தந்தை வெள்ளையன் ஆகியோரை தாக்கினர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், பச்சை, ஏழுமலை உட்பட 6 பேர் மீது மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us