ADDED : மார் 12, 2025 10:14 PM

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டருக்கு சிங்கப்பெண் விருது வழங்கப்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா. இவர் அப்பகுதியில் சிறப்பாக பணியாற்றி பொது மக்களிடம் அன்பாக நடந்து கொள்வதாக கள்ளக்குறிச்சி மாவட்ட மனித உரிமை ஆணையம் பாராட்டியது.
மேலும் அவருக்கு சிங்கப்பெண் விருதையும் வழங்கியது. இந்த விருதை நிர்வாகி இளங்கோவன் அவருக்கு வழங்கினார். அப்போது, அவருடன் போலீசார் உடன் இருந்தனர்.