ADDED : ஜூன் 30, 2024 05:21 AM

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமில் சிறப்பு அழைப்பாளராக வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர், மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லைவாணன், இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை குறித்து விளக்கமளித்தார். பின் அடிப்படை சட்டங்கள் இந்திய குடிமக்களை எவ்வாறு பாதுகாக்கிறது. அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது போன்றவை பற்றியும், பள்ளி, கல்லலுாரி மாணவியர்களுக்கு போக்சோ சட்டம், ரேக்கிங், இளம் வயது திருமண தடுப்பு சட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.
மேலும் மாணவிகளுக்கான சொத்துரிமை, கல்வி உரிமை சட்டம், சட்டம் பயின்றால் அதில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம், ஆசிரியர்கள் மதுரா, ஷபியா, இன்பநிலா மற்றும் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
வழக்கறிஞர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.