/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
ADDED : ஜூலை 02, 2024 11:27 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருத்திகையையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், மூலவர் சுப்ரமணியருக்கு மகா அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.