Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி காமாட்சியம்மன்

கள்ளக்குறிச்சி காமாட்சியம்மன்

கள்ளக்குறிச்சி காமாட்சியம்மன்

கள்ளக்குறிச்சி காமாட்சியம்மன்

ADDED : ஜூலை 22, 2024 01:30 AM


Google News
Latest Tamil News

திருமண தடை நீங்க...


திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், கடன் தொல்லை சரியாகவும், உடல் பிணி தீரவும் கள்ளக்குறிச்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு செல்லுங்கள் உடனடி பலன் கிடைக்கும்.

கள்ளக்குறிச்சி நகரில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காஞ்சி காமாட்சிக்கு நிகரான கோவில் இது. கள்ளக்குறிச்சி கமலா நேரு தெருவில் உள்ள இந்த கோவிலில் சிரித்த முகத்துடன் காமாட்சியம்மன் அருள்பாலிக்கிறார். இவருடன் ஆஞ்சநேயர், தட்சணாமூர்த்தி, சித்தி விநாயகர், கயல்விழி அம்பிகா சமேத ஏகாம்பரேஸ்வரர், வள்ளி தெய்வாணை சமேத கல்யாண சிவசுப்ரமணியம், சங்கு சக்கரத்துடன் விஷ்ணு துர்கை, நவநாயகர்கள் அருள் பாலிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை தோறும் துர்கையம்மனுக்கு நடக்கும் சிறப்பு ராகு கால பூஜையில் பங்கேற்றால் குடும்ப பிரச்னை தீரும். பெண்களுக்கு திருமண தடை நீங்கும். அமாவாசை தோறும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது. ஆடி மாத 5ம் வெள்ளியன்று 108 சங்காபிஷே கம், 108 திருவிளக்கு பூஜைகள் சிறப்பு பெற்றதாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us