/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ படியிலிருந்து தவறி விழுந்து ஐ.டி.ஐ., ஆசிரியர் பலி படியிலிருந்து தவறி விழுந்து ஐ.டி.ஐ., ஆசிரியர் பலி
படியிலிருந்து தவறி விழுந்து ஐ.டி.ஐ., ஆசிரியர் பலி
படியிலிருந்து தவறி விழுந்து ஐ.டி.ஐ., ஆசிரியர் பலி
படியிலிருந்து தவறி விழுந்து ஐ.டி.ஐ., ஆசிரியர் பலி
ADDED : ஜூலை 22, 2024 07:54 PM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே வீட்டின் மாடி படியிலிருந்து தவறி கீழே விழுந்து அரசு ஐ.டி.ஐ., ஆசிரியர் இறந்தார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 40; இவர் சின்னசேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
சின்னசேலம் செங்குந்தர் தெருவில் முதல் மாடியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சுந்தர்ராஜன் வீட்டின் படிக்கட்டில் இறங்கி வந்தபோது தவறி கீழே விழுந்து படுகாயயமடைந்த அவர் சம்பவ இடத்திலயே இறந்தார்.
புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.