/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு
இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு
இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு
இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 09, 2024 05:02 AM

சங்கராபுரம், : சங்கராபுரம் இன்னர்வீல் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
கவுரி விஜயகுமார் தலைமை தாங்கி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் ரோட்டரி மாவட்டம் பூங்கொடி சிவகுமார், கவுரவ விருந்தினர் இன்னர் வீல் கிளப் மாவட்ட எடிட்டர் நிஷா ராஜா முன்னிலை வகித்தனர்.
கிளப்பின் புதிய தலைவராக சுபாஷிணி ரமேஷ், செயலாளராக உஷாதேவி புருேஷாத், பொருளாளராக மஞ்சுளா கோவிந்தராஜ் பொறுப்பேற்றனர்.
புதிய நிர்வாகிகளை வாழ்த்தி ரோட்டரி முன்னாள் தலைவர்கள் முத்துக்கருப்பன், ஜனார்தனன், செந்தில்குமார், திருநாவுக்கரசு, சவுந்தர், ரகுநந்தன், அசோக்குமார் வரதராஜன், டாக்டர் இன்பநேசன், விஜய்குமார், மனவளகலை மன்ற தலைவர் முருகன், பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி, வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் வாழ்த்திப் பேசினர்.
சங்கராபுரம் தாலுகாவில் உள்ள 15 அரசு உயர்நிலை,மேல்நிலை பொது தேர்வில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
நிரந்தர சேவை திட்டத்திற்கு டாக்டர் நடராஜன் - ராஜாமணி நினைவாக டாக்டர் இன்பநேசன், டாக்டர் பிரியா ஆகியோர் 50 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.
விழாவை முன்னாள் தலைவர்கள் தீபா சுகுமார், அகல்யா ரவிச்சந்திரன், தொகுத்து வழங்கினர்.