/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் புதிய குடிநீர் இயந்திர துவக்க விழா கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் புதிய குடிநீர் இயந்திர துவக்க விழா
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் புதிய குடிநீர் இயந்திர துவக்க விழா
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் புதிய குடிநீர் இயந்திர துவக்க விழா
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் புதிய குடிநீர் இயந்திர துவக்க விழா
ADDED : ஜூன் 28, 2024 11:17 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் பயன்பாட்டிற்காக புதிய குடிநீர் இயந்திரம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களின் விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
காலை முதல் இரவு வரை இந்த வளாகத்திலேயே தங்கி இருந்து வர்த்தகம் முடிந்து அதற்கான நிதியை வங்கி மூலம் பெற்ற பின்னர் தங்களின் பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இதனால் இங்கு வருபவர்களுக்கு அதிகளவில் குடிநீர் தேவை இருந்து வருகிறது.
இதனை கருத்தில்கொண்டு கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கத்தினர், விவசாயிகளின் வசதிக்காக ரூ.30,000 மதிப்புள்ள குடிநீர் இயந்திரத்தை இலவசாக வழங்கினர்.
கமிட்டி வளாகத்திற்குள் நிறுவப்பட்டுள்ள குடிநீர் இயந்திரத்தை கள்ளக்குறிச்சி நகராட்சி சேர்மன் சுப்ராயலு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கத் தலைவர் இமானுவேல் சசிகுமார், செயலாளர் பாபு, பொருளாளர் செல்வகுமார் மற்றும் முன்னாள் தலைவர்கள் ஆதிகேசவன், முத்துசாமி, ஞானராஜ், மாவட்ட தேர்வு ஆளுநர் செந்தில்குமார், தேர்வு தலைவர் ராஜேந்திரன், தேர்வு துணையாளர் ராமலிங்கம், இயக்குனர் அம்பேத்கார் ஆகியோர் உடனிருந்தனர்.
கமிட்டி வர்த்தகர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் சந்தியா நன்றி கூறினார்.