ADDED : மார் 12, 2025 10:10 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மண்டல அளவிலான பணியாளர் குறைதீர் கூட்டம் நடத்துவது வழக்கம். அதன்படி, கள்ளக்குறிச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நாளை காலை 11:00 மணிக்கு, குறைதீர் கூட்டம் நடக்கிறது.
கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் பணி தொடர்பான குறைகளை மனுவாக அளிக்கலாம். பணியின் போது ஏற்படும் வேறு வகை குறைகள் தொடர்பாகவும் மனு அளிக்கலாம். விதிகளுக்கு உட்பட்டு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.