/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2024 01:13 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் அம்பாயிரம், செயலாளர் ராஜாமணி முன்னிலை வகித்தனர்.
அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குதல், காசில்லா மருத்துவ திட்டத்தை அமல்படுத்துதல், ஊதிய உயர்வு நிலுவை தொகையை ஓய்வூதியர்களுக்கு வழங்குதல், 70 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.