/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பாரதியார் குருகுலத்திற்கு இடம் தானம் வழங்கல் பாரதியார் குருகுலத்திற்கு இடம் தானம் வழங்கல்
பாரதியார் குருகுலத்திற்கு இடம் தானம் வழங்கல்
பாரதியார் குருகுலத்திற்கு இடம் தானம் வழங்கல்
பாரதியார் குருகுலத்திற்கு இடம் தானம் வழங்கல்
ADDED : ஜூன் 30, 2024 05:00 AM

கள்ளக்குறிச்சி, : கடலுார் பாரதியார் குரு குலத்திற்கு கள்ளக்குறிச்சி தொழிலதிபர் 5,000 சதுர அடி இடத்தை ஹிந்து முன்னணி மாநில செயலாளரிடம் தானமாக வழங்கினார்.
ஹிந்து முன்னணி சார்பில் திருச்சி, திருப்பூர், கடலுார் பகுதிகளில் பாரதியார் குருகுலம் நடத்தப்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வரும் குருகுல வளர்ச்சிக்காக கள்ளக்குறிச்சி தொழிலதிபர் ராஜேந்திரன், தனக்கு சொந்தமான 5,000 சதுர அடி இடத்தை ஹிந்து முன்னணி மாநில செயலாளர் மனோகரிடம் தானமாக வழங்கினார்.
கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டு, பாரதியார் குருகுலத்திற்கு இடம் தானமாக வழங்கிய தொழிலதிபர் கண்ணனுக்கு நன்றி கூறினர்.