/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்
ADDED : ஜூலை 16, 2024 07:20 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவளூர் கூட்ரோட்டில் தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, அவைத் தலைவர் பிச்சைப்பிள்ளை தலைமை தாங்கினார். சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார், சேர்மன் அஞ்சலை கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார்.
சங்கராபுரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில் வேட்பாளர் மலையரசன் வெற்றி பெற்றதற்கும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விஜய் ஆனந்த் நன்றி கூறினார்.