/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணி: கலெக்டர் ஆய்வு ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணி: கலெக்டர் ஆய்வு
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணி: கலெக்டர் ஆய்வு
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணி: கலெக்டர் ஆய்வு
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 16, 2024 07:23 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வாணாபுரம் பகண்டைகூட்ரோட்டில் 3.61 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக பி.டி.ஓ., அலுவலகம் கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. இக்கட்டடத்தை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மரூர் ஊராட்சிக்குட்பட்ட புதுாரில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 2.44 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் வாய்க்காலை ஆய்வு செய்து, வாய்க்காலின் நீளம், அகலம், தரம், தடிமன் ஆகியவற்றை அளவீடு செய்தார். தொடர்ந்து, ஓடியந்தலில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 11.83 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சிமென்ட் சாலையை தோண்டி பார்த்து, ஜல்லியின் அளவு, சாலையின் தடிமன் ஆகியவை திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு சரியாக உள்ளதாக எனவும், சாலையின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
அதேபோல், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 69.33 லட்சம் ரூபாய் மதிப்பில், பெரிய பகண்டை - வாணாபுரம் புதுார் வரை அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம், வாணாபுரம் புது காலனியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 2.45 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வடிகால் வாய்க்காலை ஆய்வு செய்தார்.
அப்போது, கிராமத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் திட்ட மதிப்பீட்டில், நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளவாறு தரமாகவும், ஒப்பந்த காலத்திற்குள்ளும் மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், நடராஜன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.