ADDED : ஜூன் 16, 2024 06:45 AM
கள்ளக்குறிச்சி: கீழ்குப்பம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கீழ்குப்பம் அடுத்த கருங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகள் மகாலட்சுமி, 16; பத்தாம் வகுப்பு முடித்த இவர், சில மாதங்களாக வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த மாதம் 18ம் தேதி சின்னசேலம் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.